புத்தாண்டுக்காக ஆடைகளை வாங்க சென்றவர்களுக்கு நேர்ந்த கதி

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலையில் டிப்பர் வாகனமொன்றும், முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயம் அடைந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியில் பயணம் செய்த இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய், வென்ராசன்புர பகுதியைச் சேர்ந்த நிலுக்கா சுதர்சினி வயது (24),ஹேரத் சம்பத் வயது (30) ஆகிய இருவரே பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புத்தாண்டுக்காக ஆடைகளை கொள்வனவு செய்வதற்கு முச்சக்கர வண்டியில் சென்ற போதே வேகமாக சென்ற டிப்பர் வாகனம் மோதியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதோடு, நீதிமன்றின் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers