கல்லடி கடற்கரை பகுதியில் மாபெரும் சிரமதான நடவடிக்கை

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் அழகிய கடற்கரை பிரதேசங்களில் ஒன்றாகவும் அதிகளவான மக்களை கவர்ந்த பகுதியாகவும் உள்ள கல்லடி கடற்கரை பகுதியில் இன்று மாபெரும் சிரமதான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன.

ஐ கொமினிட்டி அமைப்பின் ஏற்பாட்டில் இளைஞர் யுவதிகள் மற்றும் பொது அமைப்புகளின் பங்களிப்புடன் இந்த சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த சிரமதான நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் உட்பட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஐ கொமினிட்டி அமைப்பின் பிரதிதிகள், இளைஞர் யுவதிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது கடற்கரை பகுதிகளில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையினை குறைக்கும் வகையிலான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இன்று கடல்வாழ் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறிவரும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையினை கட்டுப்படுத்துவதற்கு இளைஞர் யுவதிகளை

ஊக்கப்படுத்தும் வகையிலேயே இவ்வாறான நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக ஐ கொமினிட்டி அமைப்பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான வேணுகா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடற்கரையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையினை கட்டுப்படுத்துவதற்கு இளைஞர் யுவதிகள் தம்மால் முடிந்தவற்றை செய்யவேண்டும்.

இவ்வாறான நிகழ்வுகளுக்கு மாவட்டத்தில் உள்ள அவைரும் ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் எனவும் இவ்வாறான நிகழ்வுகளை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers