கிணறுகளில் நீர் வற்றி காணப்படுவதால் பாரிய சவாலுக்கு மத்தியில் பொது மக்கள்

Report Print Mohan Mohan in சமூகம்

தற்போது ஏற்பட்டுள்ள அதிகளவான வெப்பநிலை காரணமாக புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் குடிநீரை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

சில கிராமங்களில் கிணறுகளில் நீர் வற்றி காணப்படுவதாகவும் இதனால் தண்ணீரினை பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 18 கிராமங்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 1967 குடும்பங்களை சேர்ந்த 6296 அங்கத்தவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான குடிநீரினை விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.