விகாரி வருடத்தை கொண்டாட மலையக மக்கள் தயார்!

Report Print Thirumal Thirumal in சமூகம்

நிகழும் மங்கலகரமான 1194ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீ விகாரி வருஷம் உத்தராயனம் வஸந்தருது சித்திரை மாதம் 01ம் திகதி அதாவது நாளைய தினம் - சுக்லபக்ஷ நவமியும் - ஆயில்ய நக்ஷத்ரமும் - சூலம் நாமயோகமும் - கௌலவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை பகல் 01.15 மணிக்கு கடக லக்னத்தில் விகாரி வருஷம் பிறக்கிறது.

சூரிய பகவான் மீண்டும் மேஷ ராசியில் பிரவேசிக்கும் வரை உள்ள காலப்பகுதியே ஓர் தமிழ் -வருஷமாகும்.

இந்த புத்தாண்டு நாளைய தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புத்தாண்டை முன்னிட்டு இன்றைய தினம் ஹட்டனில் வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டமை காணக்கூடியதாக இருந்தது.

இரவு பகலாக பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு விசேட போக்குவரத்து சேவைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers