பிறந்திருக்கும் விஹாரி வருடத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இன்றையதினம் இடம்பெற்றுவருகின்றன.
இந்நிலையில், வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் புதுவருடத்திற்கான விசேட பூஜைகள் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளன.
இதன்போது, அபிஷேகப் பூஜை மற்றும் வந்த மண்டப பூஜைகள் என்பன இடம்பெற்றதுடன் இப்பூஜை வழிபாடுகளில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.