யாழ்ப்பாணத்திலிருந்து தென்னிலங்கை சென்ற ரயில் தடம்புரண்டது!

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாணத்தில் இருந்து தென்னிலங்கை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று தடம்புரண்டுள்ளது.

ரயில் தடம்புரண்டமையினால் வடக்கு மார்க்க ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அனுராதபுரம் - சாலியபுர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டுள்ளதாக கூறப்படுகின்றது. ரயிலின் ஒரு பெட்டி இவ்வாறு தடம் புரண்டுள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தடம்புண்ட ரயில் பெட்டியை சீர்செய்து ரயில் போக்குவரத்தை சீராக முன்னெடுக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.