பிரிந்திருந்த மனைவியை தாக்கிய நபர் விளக்கமறியலில்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பிரிந்திருந்த மனைவியை மது போதையில் சென்று தாக்கி காயப்படுத்திய சந்தேக நபரை இம்மாதம் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எம்.நயீம் இன்று உத்தரவிட்டார்.

மாவடிச்சேனை, வெருகல் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மனைவியை ஐந்து வருடங்களாக பிரிந்திருந்த நிலையிலே மனைவி வேறு நபருடன் தொடர்புடன் இருப்பதாக அறிந்ததையடுத்தே மது போதையுடன் வீட்டுக்குச் சென்று தாக்கியுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை பொலிஸார் மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

மனைவி பலத்த காயங்களுடன் சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Latest Offers