புத்தாண்டு தினத்தில் 200 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Report Print Mubarak in சமூகம்

தமிழர் தலைநகரான திருகோணமலையில் 200 போதை மாத்திரைகளுடன் புத்தாண்டு தினமான இன்று ஒருவரை துறைமுக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை, பவர் ஹவுஸ் வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் திருகோணமலை காக்கை தீவில் 200 போதை மாத்திரைகளுடன் வீதியில் நின்ற போதே துறைமுக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் துறைமுக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers