பல்வேறு நாடுகளிலும் facebook - whatsapp சேவைகள் செயலிழப்பு!

Report Print Murali Murali in சமூகம்

பல்வேறு நாடுகளிலும் பிரபல சமூக ஊடகங்களான facebook - whatsapp - instagram உள்ளிட்டவைகளின் சேவைகள் செயலிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், சுமார் மூன்று மணி நேர செயலிழப்புக்கு பின்னர், மீண்டும் குறித்த தளங்கள் சரிசெய்யப்பட்டு வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், facebook தளத்தை பயன்படுத்த முடியவில்லை என 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை, கடந்த மார்ச் மாதம் facebook தளம் செயலிழந்திருந்த நிலையில், அதன் சேவைகளை 24 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்த முடியாமல் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.