முல்லைத்தீவில் அமைதியான முறையில் விகாரி புதுவருட கொண்டாட்டங்கள்

Report Print Mohan Mohan in சமூகம்

60 வருடம் 33 ஆவது சங்கரத்தில் இன்று விகாரி வருடம் உதயமாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த விகாரி புதுவருடப்பிறப்பு கொண்டாட்டங்கள் முல்லைத்தீவில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்றது.

மேலும் வரட்சியின் உச்சத்தின் காரணமாக பொதுமக்களின் இயல்பு நிலை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெப்பமான காலநிலை மற்றும் பல்வேறுபட்ட வாழ்வாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பொதுமக்கள் இன்று உதயமாகியுள்ள விகாரி புதுவருடத்தை வரவேற்றுள்ளதுடன் அமைதியான கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.