நாளை இதை கட்டாயம் செய்யுங்கள்! நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

Report Print Murali Murali in சமூகம்

நாளைய தினம் அனைத்து இலங்கையர்களும் மரக்கன்று ஒன்றை நாட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி, மர நடுகைக்கான சுப நேரமாக ஏப்ரல் 15ம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 11.17 மணிக்கு கிழக்குத் திசையை நோக்கி இந்த மரக்கன்றை நடுவது நல்லதாகும்.

இந்நிலையில், இவ்வருட சிங்கள, தமிழ் புத்தாண்டு பாரம்பரிய நிகழ்வுகளில் மரம் நடும் நிகழ்வும் ஒரு சம்பிரதாய நிகழ்வாக இணைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மரக்கன்றொன்றை நாட்டி சுற்றாடலுக்கான பொறுப்பை நிறைவேற்ற ஒன்றிணையுமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

சுப நேரத்தில் மரக்கன்றொன்றை நட்டு எதிர்கால தலைமுறைக்கும் சுற்றாடலுக்கும் பிரஜைகள் என்ற தமது பொறுப்பினை நிறைவேற்ற ஒன்றிணையுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers