யாழில் மாணவன் மீது தாக்குதல்; மாணவன் சிகிச்சைபெற்ற வைத்தியசாலைக்குள் நுழைந்த கும்பலால்

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்

புதுவருட தினமான இன்று யாழ்ப்பாணத்தில் நண்பர்கள் இணைந்து மது அருந்திய போது ஏற்பட்ட முரண்பாட்டினால் பள்ளிக்கூட மாணவன் வெட்டுக் காயங்களுக்கு இலக்காகி சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணம், வரணி இயற்றாளைப் பகுதியில் வைத்து இம் மாணவன் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான மாணவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர், இரவு 7 மணியளவில் மருத்துவமனைக்கு வந்த கும்பல் ஒன்று அங்கும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

புதுவருட கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், மதுபானம் அருந்தியுள்ளனர். இதன் போது ஏற்பட்ட கைகலப்பிலேயே மாணவர் வெட்டுக் காயத்துக்கு இலக்காகி சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், குறித்த மாணவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்ட போது அங்கு வந்த கும்பல் மாணவருடன் மருத்துவமனைக்குச் சென்றவர்களை தாக்க முற்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவத்தில் மீசாலையிலுள்ள பள்ளிக்கூடத்தில் கல்வி கற்றுவரும் 19 வயதுடைய மாணவனே வெட்டுக்காயத்துக்குள்ளாகிய நிலையில் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி மருத்துவமனைக்குள் குறித்த கும்பல் மோதலில் ஈடுபட மருத்துவமனை வளாகத்திற்குள் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து சாவகச்சேரி காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

எனினும் அந்நபர்கள் காவல்துறையினர் வருவதற்குள் அங்கிருந்து தப்பியுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சாவகச்சேரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.