சாவகச்சேரி நுனாவில் பகுதியில் விபத்து! இளைஞன் படுகாயம்

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்

சாவகச்சேரி நுனாவில் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோட்டார் சைக்கிளில் இன்று மாலை 6 மணியளவில் இரண்டு இளைஞர்கள் குறித்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை, எதிரே வந்து கொண்டிருந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டதாக தெரியவருகிறது.

இவ் விபத்தின்போது, படுகாயமடைந்த இளைஞர் ஆபத்தான நிலையில் யாழ். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இவ் விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.