அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் மோதி விபத்து - புத்தாண்டில் ஏற்பட்ட விபரீதம்

Report Print Vethu Vethu in சமூகம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிபென்ன பகுதிகளில் பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

3 விபத்துக்களில் கிட்டத்தட்ட 10 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

புத்தாண்டு காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாரியளவு வாகனங்கள் பயணிக்கின்றன.

இந்நிலையில் இடம்பெற்ற இந்த விபத்துக்களில் பேருந்து ஒன்று, இரண்டு வேன்கள் மற்றும் 7 மோட்டார் வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன் அதிவேக நெடுஞ்சாலையின் சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் விபத்தினால் நேற்று இரவு முதல் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.