லிட்டில் லண்டனில் ரணில்! இணையத்தை தெறிக்க விட்ட மைத்திரி

Report Print Vethu Vethu in சமூகம்

சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பால் பொங்க வைக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடைந்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி மைத்திரி விக்ரமசிங்க இணைந்து பால் பொங்க வைத்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பால் பொங்க வைக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியன.

எனினும் அந்த இருவரது புகைப்படங்களும் பெரிதான பிரபல்யமடையவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

லிட்டில் லண்டன் என வர்ணிக்கப்படும் நுவரெலியாவில் பிரதமர் தனது மனைவியுடன் புத்தாண்டை கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.