விரைவில் புதிய வர்த்தமானி அறிவித்தல்

Report Print Kamel Kamel in சமூகம்

தனியார் வைத்தியசாலைகளை நெறிப்படுத்தும் புதிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

27 வகையான மருந்து மாத்திரைகளுக்கான விலை குறைப்பு தொடர்பில் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் பின், தனியார் வைத்தியசாலைகளை நெறிபடுத்துதல் தொடர்பான இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளது.

சுகாதார அமைச்சு இந்த தகவல்களை கொழும்பு ஊடகங்களுக்கு வழங்கியுள்ளது. ஏற்கனவே 48 வகையான மருந்து மாத்திரைகளுக்கு விலைக்கட்டுபாடு நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிதாக விலைக்கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ள மருந்து வகைகளில் புற்று நோய் தடுப்பு மருந்தும் உள்ளடக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.