2017ஆம் ஆண்டு இறுதிவரை 17,600 சிறுவர் துஸ்பிரயோக வழக்குகள்

Report Print Ajith Ajith in சமூகம்

2017ஆம் ஆண்டு இறுதிவரை இலங்கையில் 17,600 சிறுவர் துஸ்பிரயோக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை 2017இல் மாத்திரம் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் 161 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் 2015ஆம் ஆண்டை காட்டிலும் இது குறைவான தொகையாகவே உள்ளது.

சிறுவர் துஸ்பிரயோகங்களை பொறுத்தவரையில் இனங்காணப்பட்ட 30 குற்றவாளிகள் 16 வயதுக்கும் உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.