மன்னாரில் மக்களும், கால்நடைகளும் பாதிப்பு

Report Print Ashik in சமூகம்

கடுமையான வறட்சி காரணமாக மன்னார் மாவட்டம் முழுவதும் குளங்கள் மற்றும் வாய்க்கால், நீர்நிலைகள் என அனைத்தும் வற்றிய நிலையில் காணப்படுவதால் அப்பகுதி மக்கள் மாத்திரம் இல்லாமல் கால் நடைகளும் பாதிப்படைந்துள்ளன.

நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அதிக வெப்பத்துடனான காலநிலை நிலவி வந்த நிலையில் இதனால் மன்னார் மாவட்டமும் பாதிப்படைந்துள்ளது.

இதன்படி மன்னார், மடு, மாந்தை மேற்கு, முசலி, நானாட்டான் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்கள் அனைத்தும் வெப்பம் காரணமாக வரண்டு காணப்படுவதனால் கால்நடைகளும் இறந்து போகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Latest Offers