பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அமுலுக்கு வருவதை தடுப்பதற்கான முன்னெடுப்பு

Report Print Sumi in சமூகம்
58Shares

யாழ். கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையில் நாளை மறு தினம் பிற்பகல் ஐந்து மணியளவில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனநாயக ரீதியிலான கோரிக்கைகளை முன்வைத்து இடம்பெறுகின்ற மக்களுடைய போராட்டங்களை ஒடுக்குகின்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் (CTA) அமுலுக்கு வருவதை தடுப்பதற்கான முன்னெடுப்புகளை யாழில் மேற்கொள்வதற்காக இந்த கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதில் அனைத்து அரசியல் கட்சிகள், வெகுஜன அமைப்புகள், சமூக மட்ட அமைப்புகள், இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புக்கள், சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள் ஆகியோரை இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஏனைய பொது அமைப்புக்களுடன் இணைந்து அழைப்பு விடுத்துள்ளது.