சிவனும், புத்தரும் சாத்தான்கள்! யாழில் தடை

Report Print Sumi in சமூகம்

சிவனும், புத்தரும் சாத்தான்கள் என்னும் வாக்கியத்துடன் கிளிநொச்சியில் நடத்தப்பட்ட மத ஆராதனை நிகழ்வினை யாழ்ப்பாணத்தில் பொலிஸார் தடை செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் இன்று முதல் மூன்று தினங்களிற்கு இடம்பெறவிருந்த குறித்த மத ரீதியிலான வழிபாட்டு முறையில் நேரடியாகவே ஏனைய மதங்களை இழிவு படுத்துவதனால் அந் நிகழ்வை தடை செய்ய வேண்டும் என பொலிசாரிடம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நிகழ்வை நடத்த பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

யாழ். நகரில் இன்று முதல் மூன்று தினங்களிற்கு மதரீதியிலான வழிபாட்டு ஆராதனை மேற்கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இவற்றின் அடிப்படையில் கிளிநொச்சியிலும் இம்மாத ஆரம்பத்தில் இதே நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.

இவ்வாறு கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வின்போது சிவன், புத்தர் ஆகியோர் சாத்தான்கள் என்னும் வாக்கியம் குறித்த ஆராதனையின்போது ஓதப்படுவது வீடியோ ஆதாரத்துடன் பொலிஸாருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் குறித்த ஆராதனைக்காக இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள மூவரும் சுற்றுலா விசாவில் நாட்டிற்குள் உள் நுழைந்து இவ்வாறான குழப்பகரமான ஆராதனையில் ஈடுபடுகின்றனர் எனவும் அந்த முறைப்பாட்டினை மறவன்புலவு சச்சிதானந்தம் மேற்கொண்டிருந்தார்.

இவற்றின் அடிப்படையில் ஆராய்ந்த பொலிஸார் குறித்த நிகழ்வு இடம்பெறுவதனை நிறுத்துமாறு ஏற்பாட்டாளர்களிற்கு அறிவித்துள்ளனர்.

அதன் விபரத்தினை முறைப்பாட்டாளரான தனக்கும் அறியத்தந்துள்ளதாக முறைப்பாட்டாளர் தெரிவித்தார்.

இதேநேரம் இம் மாதம் 29ஆம் திகதி இதே நிகழ்வு கல்முனையிலும் இடம்பெறவிருந்த நிலையில் அங்கும் இதனைத் தடை செய்யுமாறு முறையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Latest Offers