புத்தாண்டில் ஏற்பட்ட மோதல்! 8 பேர் வைத்தியசாலையில்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் புத்தாண்டுத்தினமான நேற்று ஏற்பட்ட வன்முறைகள் மற்றும் விபத்துக்களால் எட்டுப்பேர் வரையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்லாறுப்பகுதியில் இடம்பெற்ற வெட்டுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட விபத்துக்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களால் இவ்வாறு எட்டுப்பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பல்வேறு குற்றச்சாட்டுக்களால் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலையத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.