சகோதரியுடன் ஏற்பட்ட தர்க்கம்! தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட யுவதி

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்

அக்காவிற்கும் தங்கைக்கும் இடையில் ஏற்பட்ட தர்க்கத்தையடுத்து தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் வடமராட்சி, நவிண்டில் கொற்றாவத்தையைச் சேர்ந்த யுவதி.

குடும்பத்தில் தன்னுடைய சகோதரியோடு சண்டை போட்டுக் கொண்ட குறித்த யுவதி மனவுளைச்சலடைந்து இத் தற்கொலை முயற்சியினை மேற்கொண்டதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

தீக் காயங்களுடன் படுகாயமடைந்தவர், யாழ்ப்பாணம் வடமராட்சி, நவிண்டில் கொற்றாவத்த பகுதியில் உயர்தரம் படித்துவரும் மாணவி என்று அறியமுடிகிறது.

தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ மூட்டிக் கொண்டவரை உடனடியாக, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சிறுமியின் உடலில் 80 வீதமான எரிகாயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நவிண்டில்- கொற்றாவத்தை பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மூவர் இவ்வாறு தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளனர். அதில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.