விகாரைக்குள் புகுந்து புத்த பிக்கு மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய அண்ணன் தம்பி!

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்

விகாரையிலிருந்த தேரர் மற்றும் தேரருக்கு சேவை புரியும் ஊழியர்கள் ஆகியோர் மீது தாக்குதல் நடாத்திய அண்ணன், தம்பி இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மது போதையிலிருந்த அண்ணன் தம்பி இருவரையும் விகாரைக்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோபமடைந்த இருவரும் விகாரைக்குள் புகுந்து அங்கிருந்த புத்த தேரரையும், தேரருக்கு உதவி புரியும் ஊழியர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, அங்கு விரைந்த அவர்கள், ராஜாங்கன யாய 18 ஆம் பிரதேசத்தை சேர்ந்த அண்ணன் தம்பி இருவரையும் இன்று கைது செய்தனர்.

இதேவேளை, தாக்குதலுக்குள்ளான தேரர் மற்றும் ஊழியர் ஆகியோர் அனுராதபுர போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.