மயக்க மருந்தை பயன்படுத்தி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஐவர் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கிண்­ணியா பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பல பகு­தி­களில் கடந்த இரண்டு மாத கால­மாக இடம் பெற்று வந்த இரவு நேர கொள்ளைச் சம்­ப­வங்­க­ளோடு தொடர்­புடைய ஐவர் அடங்கிய குழுவை இன்று (15) சீனக் குடா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிண்ணியாவில் கிரீஸ் மனி­தர்­க­ளாக இருக்­கலாம் என்ற சந்­தேகம் ஏற்­படுத்தி பொது மக்களை அச்சம் கொள்ள செய்து கடந்த இரண்டு மாத கால­மாக பல் வேறு கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக சந்தகிக்கப்படுகின்ற கொள்ளைக் கும்பலை, பொது மக்களின் உதவியோடு பொலிஸார் கைது செய்துள்ளனர்

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பெரிய கிண்ணியா , பெரியாற்றுமுனை பிரதேசங்களை சேர்ந்த 18 வயது தொடக்கம் 25 வயது உடையவர்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி திருகோணமலை, ஜமாலியாவை சேர்ந்த டுலான் என்றழைக்கப்படும் டிலான் தலைமறவாகியுள்ளதாகவும், இவரை கைது செய்யும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

இவர் முன்னர் மின்சார சபையில் மாணி வாசிப்பாளராக கடமையாற்றி இடைநிறுத்தப்பட்டவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கிண்ணியாவிலுள்ள பணக்காரர்கள் யார் என்பதை அறிந்த இவர் இரவு வேளைகளில் இளைஞர்கள் மூலம் பல கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்கள் வீட்டின் ஓட்டைக் கழற்றி விட்டு வீட்­டுக்குள் இறங்கி வீட்டு உரிமையாளர்களுக்கு ஸ்பிறே மருந்து விசிறிவிட்டு நகை, பணம், மடிக் கணனி என பல பொருட்களை திருடிச் சென்றுள்ளதாகவும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக கிண்ணியா பொலிஸாரிடம் முறைப்படுகள் செய்த போதிலும் பொலிஸாரின் அசம்பந்த போகினால் DIG சமன் யடவர , ASP புத்திக மானதுங்க , IP விதான ஆராய்ச்சி ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் இவர்களின் நேரடி கண்காணிப்பில் விஷேட குழுவினரின்

உதவியுடன் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

மேலும் பலர் இக்கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பு பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் புலன் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சீனக்குடா பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

Latest Offers