வவுனியா வேலங்குளத்தில் பார்வையாளர் மண்டபம் திறந்து வைப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, வேலங்குளம் கோவில்மோட்டை நியூலைன் இளைஞர் கழகம் மைதானத்தில் பார்வையாளர் மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இளைஞர் கழகத்தின் தலைவர் இ.சதீஸ்குமார் தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிராம சக்தி செயற்திட்டத்தின் கீழ் நியூலைன் இளைஞர் கழகத்திற்கு வழங்கப்பட்ட நான்கு இலட்சம் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட பார்வையாளர் மண்டபம் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வேலங்குளம், மடுக்குளம், சின்னத்தம்பனை, கோவில் புளியங்குளம், சிவன்நகர், செங்கல் படை மற்றும் கோவில் மோட்டை கிராமங்களை உள்ளடக்கிய கிராம சேவகர் பிரிவுக்கு ஒரு மைதானமே அமைந்துள்ளது. குறித்த மைதானத்திற்கான பார்வையாளர் மண்டபமே திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதாரலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன், வவுனியா நகரசபை உறுப்பினர் எஸ்.காண்டீபன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் வே.குகதாசன் மற்றும் வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரி தே.அமுதராஜ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.