வாழ்வாதாரப் பயிர்ச் செய்கையை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தாயொருவர்

Report Print Mohan Mohan in சமூகம்
134Shares

வரட்சியான சூழ்நிலையிலும் தனது வாழ்வாதாரப் பயிர்ச் செய்கையை பாதுகாக்கும் முயற்சியில் தாயொருவர் ஈடுபட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியை சேர்ந்த 59 வயதுடைய சக்திவேல் விஜயலக்சுமி என்னும் தாயாரே இவ்வாறான கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த பெண் பற்றி தெரியவருவதாவது,

இளவயதிலயே தனது கணவரை இழந்த குறித்த தாய் ஊனமுற்ற ஒரு பெண்பிள்ளை உட்பட மற்றுமொரு மகளுடன் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் வசித்து வருகின்றார்.

விவசாயத்தையே வாழ்வாதாரமாக நம்பி வாழும் இந்த தாய் இவ்வாண்டின் ஆரம்பத்தில் ஒரு ஏக்கர் தோட்ட நிலத்தில் கச்சான் பயிர்ச்செய்கையை மேற்கொண்டிருந்தார்.

எனினும் அவர் எதிர்பார்க்காதவாறு முள்ளிவாயக்கால் மேற்கு பகுதியில் கடும் வரட்சி ஏற்பட்டுள்ள நிலையில் தோட்டக் கிணற்று நீர் வற்றிப்போயுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் வெப்ப அலைகளால் கருகும் தனது வாழ்வாதார பயிர்களை பார்த்துக்கொண்டிருக்க முடியாதவராய் கிடைத்த பொருள் வழங்களை கொண்டு மீக நீண்ட தூரத்தில் இருந்து நீர் இறைக்கும் முயற்சியில் தற்பொழுது ஈடுபட்டுள்ளார்.

இந்த முயற்சியினூடாக மேலதிக பணம் செலவு செய்யப்பட்டாலும் முதலீட்டின் அரைவாசி பணம் என்றாலும் கிடைத்தால் மட்டுமே தொடர்ந்தும் விவசாயத்தை தன்னால் மேற்கொள்ள முடியும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

மேலும் சுனாமி ஆளிப்பேரலை மற்றும் இறுதி யுத்தத்தின் காரணமாகவும் பாதிக்கப்பட்ட குறித்த தாய் தற்பொழுது நிலவும் அதிகளவிலான வெப்ப நிலையுடன் போராடி தனது வாழ்வாதாரப்பயிர்ச் செய்கைகளை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.