கையெழுத்து வேட்டையுடன் ஆரம்பமானது கல்முனை பிரதேசத்தின் சித்திரை புத்தாண்டு

Report Print Nesan Nesan in சமூகம்

அம்பாறை மாவட்டத்தின் தமிழ், சிங்கள மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் குகுதூகலித்துவரும் வேளையில் கல்முனை பிரதேசத்தில் தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு தங்களின் புத்தாண்டு செய்தி இவ்வாறு அமைகிறது.

கல்முனை பகுதியில் வாழும் மக்கள் சித்திரை திருநாளில் தங்களின் மிக முக்கியமான பிரச்சினையான கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தி தரமுயர்த்தி தர கோரி அரசாங்கத்திற்கு கிழக்கிலிருந்து புத்தாண்டு செய்தியாக சொல்லி வருகின்றனர்.

கல்முனைப் பிரதேசத்தில் 29 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் தமிழ் மக்களின் ஏகோபித்த கோரிக்கையாக தமிழ் பிரதேச செயலகம் தரமுயரத்தி தருமாறு இந்த புத்தாண்டு கோரிக்கைகளாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கல்முனை இளைஞர் அமைப்புக்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு தற்பொழுது சேனைக்குடியிருப்பு காளிகோயில் வளாகத்தில் இடம்பெற்றுவருகின்றது.

பின்னர் அது கல்முனையின் ஏனைய கிராமங்களுக்கும் கொண்டு செல்லப்படவிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.