திருகோணமலையில் பொலிஸார் மீது தாக்குதல்! தீவிர விசாரணைகள் முன்னெடுப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

திருகோணமலை கந்தளாயில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.

மதுபோதையில் இருந்த இரண்டு பேர் இரண்டு பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றது.

கந்தளாய் வாவியில் பொலிஸ் குடும்பத்தினர் குளித்துக் கொண்டிருந்த போது அவர்கள் மீது கந்தளாய் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரும் மற்றும் ஒருவரும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது தமது வீடுகளில் இருந்த பொலிஸ் பரிசோதகர்களும் சம்பவத்தை கேள்விப்பட்டு இடத்துக்கு வந்த போது அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.