வெளிநாட்டிலிருந்து வந்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கை பயணிகள் இருவர் நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

டுபாயில் இருந்து சட்டவிரோதமாக சிகரெட் தொகை ஒன்றை இலங்கைக்கு கொண்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் 27 வயதான பெண் என தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து 43480 சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் கைது செய்யப்பட்ட 25 வயது இளைஞனிடம் இருந்து 39,900 சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இதன் பெறுமதி 41 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் இருவரும் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.