வடக்கின் கல்வி வீழச்சிக்கு காரணம் இதுதான்! சித்தார்த்தன் எம்.பி விளக்கம்

Report Print Murali Murali in சமூகம்

வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் பிரதேசத்தின் கல்வி வீழ்ச்சியடைந்தமைக்கு வளங்களின் அழிவே முக்கிய காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியின் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

எமது பிரதேசத்தின் கல்வி இன்று கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இலங்கையின் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் இதற்கு பிரதான காரணமாகும். யுத்ததினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

யுத்தத்தினால் பாடசாலை வளங்கள் அழிந்துள்ளன. இதன் காரணமாகவே கல்வியில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் இன்று வெளிநாடுகளில் இருக்கின்றனர்.

அவர்களில் ஐந்து வீதமானோரே எமது மக்களுக்கு உதவிகளைச் செய்கின்றனர். இவர்கள் போன்று ஏனையோரும் உதவ முன்வந்தால் எமது பிரதேசங்களில் கல்வியை மேலும் முன்னோக்கி கொண்டுசெல்ல முடியும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers

loading...