நாடாளுமன்ற உறுப்பினரினால் ஒமந்தை கமநல சேவை நிலைய கேட்போர் கூடம் புனரமைப்பு

Report Print Theesan in சமூகம்

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் 2019 ஆம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட ஐந்து இலட்சம் ரூபா நிதியிலிருந்து ஒமந்தையில் கமநல சேவை நிலையமொன்று புனரமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு ஓமந்தை கமநல சேவை நிலைய கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஓமந்தை கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள கமக்கார அமைப்புக்களுக்கும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் ம.தியாகராசா, பிரதேசசபை உறுப்பினர் சிவராசா மற்றும் ஓமந்தை கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள கமக்கார அமைப்பினர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது கமக்கார அமைப்புக்களின் பிரதேசங்களில் விவசாய ரீதியாக உள்ள பிரச்சினை தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுத்துரைத்து இதற்கான தீர்வுகளை பெற்றுத்தருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியளித்துள்ளார்.

Latest Offers