வரட்சியினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு குடிநீர் வசதிகள்

Report Print Gokulan Gokulan in சமூகம்

வரட்சியால் பாதிக்கப்பட்ட கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களுக்கு பவுசர் மூலமாக இன்று குடிநீர் வழங்கப்பட்டுள்ளன.

ஆயிலியடி , மஜீட் நகர், மணியரசங் குளம், நடுவூற்று , உப்பாறு , மகரு ஆகிய கிராம மக்களுக்கே இவ்வாறு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச், முகம்மது கனியின் பணிப்புரைக்கு அமைய தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தினால் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

தற்போது ஏற்படும் அதிக வரட்சி காரணமாக இவ்வாறான குடி நீர் வழங்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

Latest Offers