குடிபோதையில் வாகனம் செலுத்திய 1536 பேர் கைது

Report Print Kamel Kamel in சமூகம்

சித்திரைப் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 1536 சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 11ம் திகதி காலை 6.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரையிலான காலப் பகுதியில் மொத்தமாக 1536 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் காலப் பகுதியில் மோட்டார் போக்குவரத்து பொலிஸாரினால் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 42114 எனத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை 6.00யுடன் முடிவடைந்த 24 மணித்தியால காலத்தில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 266 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Latest Offers