தோப்பூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் - பொதுமக்கள் விசனம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - தோப்பூர், கல்லாம்பத்தை 10 வீட்டுத் திட்ட மீள்குடியேற்ற கிராமத்திற்குள் இன்று அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பயிரினங்களும், பாதுகாப்பு வேலிகளும் துவம்சம் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதன் போது தென்னை மரங்கள், வாழை மரங்கள் மற்றும் பாதுகாப்பு சுற்று வேலிகள் போன்றவை சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தற்போது இக்கிராம மக்கள் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வரும் நிலையில் காட்டு யானைகளின் அட்டகாசமும் அதிகரித்து வருவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த காட்டு யானைகளின் அட்டகாசத்தினை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதுகாப்பு வேலிகளை அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Offers