கஞ்சிப்பான இம்ரான் வழங்கும் முக்கிய தகவல்களை இருட்டடிக்க முயற்சி

Report Print Rakesh in சமூகம்

கஞ்சிப்பான இம்ரானிடம் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளிலிருந்து வெளியாகும் முக்கிய தகவல்களை வெளியிட வேண்டாம் என உயர்மட்டங்களிலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றதாக பொலிஸ் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என சுட்டிக்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரபல போதைப்பொருள் வர்த்தகரும், பாதாள உலகக் குழுத் தலைவருமான மாகந்துர மதுஷுடன் டுபாயில் அவரின் நெருங்கிய சகா கஞ்சிப்பான இம்ரான் கைது செய்யப்பட்டார்.

மதுஷ் டுபாயில் இருக்கும் போது சில அரசியல்வாதிகள் டுபாய் சென்று அவருடன் விருந்துபசாரங்களிலும் கலந்து கொண்டுள்ளமை இம்ரானிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மதுஷுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் பலர் குறித்தும் இம்ரானிடமிருந்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன எனவும் கூறப்படுகின்றது.

உயர்மட்ட அழுத்தங்களினால், எதிர்காலத்தில் மாக்கந்துர மதுஷ் மற்றும் கஞ்சிப்பான இம்ரான் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள், இருட்டடிப்பு செய்யப்பட வாய்ப்புக்கள் உள்ளன என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்த குற்றச்செயல்களுடன் உள்ளவர்களை சிறைப்படுத்துவதுடன் மாத்திரம் விசாரணைகள் நிறைவடையுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Latest Offers