அக்காவுக்காக தங்கையின் முடிவு! வாய்ப்பிருந்தும் கலைந்த கனவு! இலங்கை சகோதரிகளுக்கு ஏற்பட்ட பெரும் சோகம்

Report Print Vethu Vethu in சமூகம்

மொனராகலையில் குடும்பத்தின் வறுமை காரணமாக பல்கலைக்கழக கல்வி கனவாகிய மாணவி தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

மொனராகலை - மக்குஆரா பிரதேசத்தில் வாழும் தினுஷா குமாரி என்ற மாணவிக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

W.M.தினுஷா குமாரி என்ற மாணவி 2017ஆம் ஆண்டு கலை பிரிவில் உயர் தர பரீட்சை எழுதினார்.

கடுமையான வறுமையில் வாழும் தினுஷாவிற்கு உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள் கிடைத்தது.

மாவட்டத்தில் 178 வயது இடம் அவருக்கு கிடைத்திருந்தது. எனினும் அவரால் பல்கலைக்கழக கற்கையை தொடர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தனது பெற்றோரை பாதுகாப்பதற்காக தினுஷா தொழிற்சாலை ஒன்றில் தொழில் செய்தி வருகின்றார்.

அன்றாட உணவுக்கு வழியில்லை என்பதே தங்களின் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளதெனவும், தினுஷாவின் பல்கலைக்கழக கனவை நிறைவேற அவரது தங்கை தனது கல்வியை தியாகம் செய்வதற்கு ஆயத்தமாகியுள்ளார்.

அக்காவுக்காக தொழிற்சாலை ஒன்றில் தொழில் சேர திட்டமிட்டுள்ளதாக தங்கை குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers