நெற்செய்கையில் ஈடுபடுவோரை ஊக்குவிக்க 10,000 மில்லியன் ரூபாய்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை, கந்தளாயில் விவசாயிகளின் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெற்றுள்ளது.

சிறிய அளவில் அரிசி ஆலை நடத்தும் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாகவும், சிறு அளவில் நெற்செய்கை செய்து விற்பனை செய்ய முடியாத விவசாயிகளின் பிரச்சினை தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதேவேளை சிறியளவில் நெற்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் விவசாயிகளின் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் மரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சிறியளவில் நெற்செய்கையில் ஈடுபடுவர்களை ஊக்குவிப்பதற்காக 10,000 மில்லியன் பெறப்பட்டுள்ளதாகவும், கைவிடப்பட்ட சிறு அரிசி ஆலைகளை இயங்குவதற்கு கடன் உதவி வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் ஹர்சா டி சில்வா இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் அமைச்சர் ஹர்சா டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃரூபின் சார்பில் அவரின் பிரத்தியக செயலாளர் சதாத் கரீம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் சாந்த ரனவீர, முன்னாள் மாகாண சபையின் உறுப்பினர் அரூன, கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் மற்றும் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர்களும் உட்பட பலர் கலந்து கொண்டனர்.