எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட பாடசாலை கட்டடங்கள் திறந்துவைப்பு

Report Print Nesan Nesan in சமூகம்

சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட பாடசாலை கட்டடங்கள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அமெரிக்க நற்புறவு திட்டத்தினூடாக சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் அமெரிக்க நாட்டு நிதியில் அமைக்கப்பட்ட இரண்டு மாடி வகுப்பறை கட்டடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதி கட்டடங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வித்தியாலய முதல்வர் ஏ.எல்.ஏ.நாபீத் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக பங்கேற்று இக்கட்டடங்களை திறந்து வைத்துள்ளார்.

நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்க நாட்டுத்தூதுவர் அலைனா பீ.டிப்லிட்ஸ் உள்ளிட்ட அமெரிக்க தூதரகத்தின் உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.