யாழ்.பல்கலைக்கழக ஆங்கிலமொழிக் கற்பித்தல் துறையின் ஆய்வு அரங்கு 2019

Report Print Sumi in சமூகம்

ஆங்கிலமொழி கற்பித்தல் அலகானது யாழ். பல்கலைக்கழகத்தின் ஒரு அலகாக 1974 இலிருந்து செயற்பட்டு வந்துள்ளது. இது கடந்த 27 மார்ச் 2019 அரச வர்த்தமானி அறிக்கையின் படி ஆங்கிலமொழிக் கற்பித்தல் துறையாக (Department of English Language Teaching- DELT ) தரமுயர்த்தப்பட்டுள்ளது .

தற்போது ஆங்கிலமொழி கற்பித்தல் துறையின் பிரதான நோக்கம் இளநிலைப் பட்டதாரிகளின் ஆங்கிலமொழித் திறனை மேம்படுத்துவதோடு,அவர்கள் ஆங்கிலமொழிப் பாவனை தொடர்பாக எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகம் கொடுக்கும் விதமாக மாணவர்களைத் தயார்படுத்தலும் ஆகும்.

90 களின் முற்பட்ட பகுதியில் .சுரேஷ் கனகராஜா (தற்போதைய Edwin Erle Sparks Professor ,Director ,Migration Studies Project ,Pennsylvania State University ,USA )இரண்டு டிப்ளோமா கற்கை நெறிகளை (PGD in TESL ,Dip .in .TESL ) அறிமுகப்படுத்தினார்.

ஆங்கிலமொழி கற்பித்தல் அலகானது ஆசிரியர்களுக்கும் ,உத்தியோகத்தர்களுக்கும் பல்வேறு வகையான டிப்ளோமா கற்கை நெறிகளை நடாத்தி வருகின்றது.

தற்போது ஆங்கில மொழி கற்கைகள் அலகானது ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக (ESL ) 5000ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 19 கல்விசார் உத்தியோகத்தர்களினுடாக கற்பித்து வருகின்றது.

மேலும் ,இவ் அலகானது ஆங்கிலமொழி கற்பித்தலில் 3 வருடப்பட்டபடிப்பினை வழங்கி வருகின்றது. அத்துடன் இதனை 4 வருட விசேட கற்கை நெறியாக ஆரம்பிப்பதற்கு தற்போது முன்மொழியப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக ஆங்கிலமொழிக் கற்பித்தல் துறையானது எதிர்வரும் மே 10 ஆம் திகதி முதன் முறையாக ஆங்கிலமொழிக் கற்பித்தல் ஆய்வரங்கு ஒன்றை கைலாசபதி கலையரங்கில் நடத்துவதையிட்டு பெருமையடைகிறோம்.

பிரதான பேச்சாளராக அமெரிக்க பெனிசில்வேனியா பல்கலைக்கழக ஆங்கில பேராசிரியரும், முன்னாள் யாழ். பல்கலைக்கழக ஆங்கில மொழி போதனா அலகின் தலைவருமான, பேராசிரியர் சுரேஷ் கனகராஜா கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.

90 களில் USA சென்ற இவர் அங்குள்ள பல்கலைக்கழகங்களில் மதிப்புக்குரிய பதவிகளை வகித்து வருகிறார். அத்துடன் மலேசிய பேராசிரியர் ஞானகுமாரன் சுப்பிரமணியன், இந்திய பேராசிரியர் முனீர்கான் கலந்து கொள்கின்றனர்.

இலங்கையில் அனைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்களும், ஆய்வாளர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஆங்கிலமொழிக் கற்பித்தலில் கல்விசார் நடைமுறைகளை ஊக்குவித்தல் எதிர்பார்ப்புகளும், யதார்த்தங்களும் எனும் கருப்பொருளை மையமாக கொண்டு இவ்வாய்வு அரங்கானது ஆங்கில ஆசிரியர்கள் மற்றும் கற்போருக்கான அனுபவப்பகிர்வு அரங்காகவும் சமகால கல்விசார் நடைமுறைகளை ஆய்வு செய்து அதில் வரும் பிரச்சினைகளுக்கு ஆய்வு ரீதியான தீர்மானங்களை மேற்கொள்வதாகவும் அமையும் ஆங்கிலமொழிக் கற்பித்தல் துறையில் உள்ள அனைவரும் இதன் மூலம் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.