ஐரோப்பாவிலிருந்து இலங்கை வந்தவர்களுக்கு நேர்ந்த கதி - மகன் பலி - ஆபத்தான நிலையில் தந்தை

Report Print Vethu Vethu in சமூகம்

நெதர்லாந்திலிருந்து இலங்கைக்கு சுற்றுலாவிற்காக வந்த குடும்பத்தினர் பாரிய விபத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

Zevenbergen பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று மாத்தளையில் பாரிய விபத்து ஒன்றிற்கு முகம் கொடுத்துள்ளது.

இலங்கைக்கு விடுமுறையை கழிக்க வந்த குடும்பம் ஒன்றே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளது.

இந்த விபத்தில் Timo என்ற 21 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Timo, அவரது அக்கா மற்றும் பெற்றோர் ஆகியோர் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர். தங்கள் பெற்றோரின் 30வது திருமண விழாவை கொண்டாடுவதற்கே இலங்கைக்கு வந்துள்ளனர்.

அவர்கள் பயணித்த வாகனம் ட்ரக் வண்டியுடன் மோதியமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் மொத்தமாக 6 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் மகன் உயிரிழந்துள்ளார். 62 வயதான தந்தை ஆபத்தான நிலையில் உள்ளார். அக்கா மற்றும் தாயார் சிறு காயங்களுடன் தப்பியுள்ளனர்.

Timo மரணத்தால் அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கள் வருத்தத்தை பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

Latest Offers