ஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்! வியப்பில் தென்னிலங்கை

Report Print Vethu Vethu in சமூகம்

ஒட்டுமொத்த இலங்கைக்கும் யாழ்ப்பாண ரயில் நிலையம் முன்மாதிரியாக திகழ்வதாக அரச தரப்பு பேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள சுத்தமான ரயில் நிலையங்கள் எதுவென்று கேட்டால் யாழ்ப்பாணம் என்று சொல்லாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண ரயில் நிலையத்தின் புகைப்படங்களுடன் “சுத்தம் குறித்து பாடம் கற்பிக்கும் யாழ்ப்பாண ரயில் நிலையம்” என அந்தப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இலங்கையின் ஏனைய பகுதியிலுள்ள ரயில் நிலையங்களும் ஏன் இவ்வாறு அழகாக பராமரிக்க முடியவில்லை என்றும் ஆதங்கம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை ஏற்றுக்கொண்டுள்ள தென்னிலங்கை வாழ் மக்கள், தமது பகுதி ரயில் நிலையங்களையும் இவ்வாறு அழக்காக வைத்திருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாண ரயில் இவ்வாறு அழகான முறையில் பராமரிக்கப்படுகின்றமைக்கு அவர்கள் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் அபிவிருத்தி தொடர்பான பல்வேறு தகவல்களை வெளியிடும் அரசாங்க பேஸ்புக் பக்கத்தில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers