குழந்தைகள் உட்பட பத்து பேரின் உயிரை பறித்த கோர விபத்து - சாரதி தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கை மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருந்த கோர விபத்து தொடர்பில் பொலிஸார் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளனர்.

10 பேரின் உயிரை பறித்த மஹியங்கனை விபத்தில் வானை செலுத்திச் சென்ற சாரதி மிகவும் வயது குறைந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சாரதி நடைபெறவுள்ள உயர்தர பரீட்சை எழுத தயாராக இருந்த மாணவன் என தெரியவந்துள்ளது.

அவர் தனது சாரதி அனுமதி பத்திரத்தை பெற்று 6 மாதங்கள் கூட முழுமையாக நிறைவடையவில்லை என பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

200100202172 v என்ற தேசிய அடையாள அட்டை இலக்கத்தை கொண்ட மாணவன் தனது சாரதி அனுமதி பத்திரத்தை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே பெற்றுள்ளார்.

இவ்வளவு குறைவான வயதுடைய மாணவன் சாரதி அனுமதி பத்திரம் பெற்று சிறிய காலப்பகுதிக்குள் 2 அல்லது 3 மீற்றர் தூரம் மாத்தரமே பயணித்தில் ஈடுபடுத்த வேண்டும்.

எனினும் இவ்வளவு தூரம் சாரதியாக குறித்த மாணவனை பயன்படுத்தியமை பாரிய குற்றம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை விபத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதியின் சாரதி அனுமதி பத்திரம் ஒருமாத காலத்திற்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து சுற்றுலா சென்றவர்கள் மீண்டும் வீட்டுக்கும் திரும்பும் வேளையில், மஹியங்கனையில் வைத்து நேற்று முன்தினம் பாரிய விபத்திற்கு முகங்கொடுத்தனர். இதன்போது இரட்டை குழந்தைகள் உட்பட பத்துப் பேர் உயிரிழந்தனர். இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எதிராக வந்த பேருந்துடன் வான் மோதுண்டமையினால் இந்த கோர விபத்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Latest Offers