வடக்கில் 37 ஆயிரம் தமிழ் பேசும் பௌத்தர்கள்! சிங்களம் கற்றுக்கொடுக்க நடவடிக்கை

Report Print Murali Murali in சமூகம்

வடமாகாணத்தில் தமிழ் பேசும் 37 ஆயிரம் பௌத்தர்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு சிங்கள மொழி அறிவு மிகவும் குறைவாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர்களுக்கு சிங்கள மொழியினை கற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி சர்வதேச பௌத்த மையத்தின் சிங்கள பௌத்த நட்புறவுத் திட்டத்தின் துணைத் தலைவர் லக்சேகம ஸ்ரீ விமலரத்ன தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இவ்வாறு வடக்கில் இருக்கும் பௌத்தர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், அவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும் என தேரர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers