கடுமையான சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் இலங்கை அரசாங்கம்! மகிழ்ச்சியில் சாரதிகள்

Report Print Vethu Vethu in சமூகம்

அமுலிலுள்ள 25000 ரூபா என்ற தண்டப்பணத்தில் மாற்றங்களை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வாகனங்களை இடது பக்கமாக முந்திச் செல்லும் குற்றத்திற்காக தற்போது 25,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்படுகிறது.

இந்த தண்டப்பணத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் கிடைத்துள்ள வேண்டுகோளைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

திருத்தம் தொடர்பான வர்த்தமானி பத்திரத்தை நாடாளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பித்து, கட்டணத்தைக் குறைப்பதற்கான திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஷோக் அபேசிங்க குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், ஏனைய வீதி ஒழுங்குமீறல்களுக்காக விதிக்கப்படும் 25,000 ரூபா தண்டப்பணத்தில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது எனவும் இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்தார்.

Latest Offers