வெளிநாடொன்றில் விபத்தில் சிக்கியுள்ள மூன்று இலங்கையர்கள்! ஒருவர் பலி

Report Print Rakesh in சமூகம்

சவூதி அரேபியாவில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மருதமுனை பகுதியை சேர்ந்த முகம்மட் ரிஹாஸ் உவைஸ் என்ற இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், விபத்தில் சிக்கிய மருதமுனையை சேர்ந்த மேலும் இருவர் ஆபத்தான நிலையில் சவூதி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்று விடுமுறை நாள் என்பதால் உணவு உண்பதற்காக இவர்கள் மூவரும் சவூதி அதிவேகப்பாதை வழியே சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த கார் இவர்கள் சென்ற வாகனத்துடன் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் சிக்கிய மூவரூம் மருதமுனையை சேர்ந்தவர்கள். ஒருவர் சம்பவ இடத்தில் மரணித்துள்ளார்.

ஏனைய இருவரில் ஒருவரின் கால் ஒன்று அகற்றப்பட்டுள்ளது எனவும், மற்றையவர் கோமா நிலையில் இருக்கின்றார் எனவும் தெரியவருகின்றது.

இவ்விபத்து தொடர்பில் சவூதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers