வவுனியாவில் திடீர் சோதனை நடவடிக்கை! 20 பேருக்கு எதிராக வழக்கு

Report Print Theesan in சமூகம்

வவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று காலை முதல் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 20 இற்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக வழக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியின் தலமையில் வவுனியா நகரசபை வீதியில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சுமார் இரண்டு மணிநேரத்தில் இருபதுக்கு அதிகமான சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதுடன் பத்துக்கு மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை, சாரதி அனுமதி பத்திரம் இன்மை, அதிக சத்தம் எழுப்பும் ஹோன் பயன்படுத்தியமை போன்ற பல்வேறு குற்றங்களுக்காகவே சாரதிகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers