அன்னதான உணவை உட்கொண்டோருக்கு நேர்ந்துள்ள நிலை

Report Print Thirumal Thirumal in சமூகம்

மஸ்கெலியாவில் ஆலய திருவிழா உற்சவத்தின் போது வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 42 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளனர்.

மஸ்கெலியா - நல்லத்தண்ணி லக்ஷபான, ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழாவின் எட்டாம் நாள் பூஜை நேற்று நடைபெற்றுள்ளது.

இதன்போது வழங்கப்பட்ட அன்னதான உணவை உட்கொண்டோருக்கு ஒவ்வாமை காரணமாக வாந்தி, வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் 7 சிறுவர்கள் உள்ளடங்கலாக 42 பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பாரிய பாதிப்புகள் இல்லை எனவும், உணவு ஒவ்வாமையினாலே வயிறோட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும், ஏனையோர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரிகளும், நல்லதண்ணி பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Latest Offers