கண்காணிப்பு கமராக்களில் பதிவாகிய காட்சிகள்! பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

Report Print Steephen Steephen in சமூகம்

தெஹிவளை நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றில் கொள்ளையிட்ட நபரை கைது செய்ய பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.

கடந்த 3ஆம் திகதி இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

சந்தேகநபர் வானில் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பான காட்சிகள் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளன.

இந்த சந்தேகநபர் பற்றிய தகவல் அறிந்தால், தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தொலைபேசி இலக்கமான 0718591668 மற்றும் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரியின் இலக்கமான 0777531321 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Latest Offers