கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் படுகொலை

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஹொரணை நகரில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

ஹொரணை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்த கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பிரதான சந்தேகநபரும், மற்றுமொரு நபரும் ஹொரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Latest Offers