குழந்தையொன்று நீரில் மூழ்கி உயிரிழப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

அனுராதபுரம் கல்கடவல பிரதேசத்தில் அமைந்துள்ள திருகன்குளம் வாவியில் நீராட சென்ற ஆண் குழந்தையொன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று குறித்த சிறுவன் தனது மூத்த சகோதரி மற்றும் சில குழந்தைகளுடன் நீராட சென்ற போது இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.

கல்கடவல பிரதேசத்தை சேர்ந்த 5 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

உயிரிழந்த குழந்தையின் சடலம் திருகன்குளம் வாவியில் பிரதேசவாசிகளால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.